பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4,249 பேர் பலி!

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4,249 பேர் பலியாகியுள்ளனர்.
உலகில் அதிகளவில் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் அந்த நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பிரேசிலில் கொரோனாவுக்கு 4,249 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3,45,025ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அங்கு ஒரேநாளில் புதிதாக 86,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,32,79,857ஆக உயர்ந்துள்ளது.