சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக, மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
- மதுரையில் கொரோனா விதிமுறைகளை கண்காணிக்க பத்து சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
- மதுரையில் உள்ள பரவை, மாட்டுத்தாவணி காய்கறி வணிக வளாகத்தில் சில்லறை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
- மதுரையில் 21 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது
- கொரோனா பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள ஸ்டிக்கரை கிழித்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்
- வரும் எப்ரல் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் மதுரை சித்திரை திருவிழா, 2020ஆம் ஆண்டை போலவே உள் திருவிழாவாக நடைபெறும்
- கோயில் வளாகத்திற்கு உட்புறத்தில் சடங்கு, சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை
என்று தெரிவித்துள்ளார்.