ஐபிஎல் 2021: பந்துவீச்சை தேர்வு செய்தது பெங்களூர் அணி!

ஐபிஎல்2021 கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்ளும் பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது.
இந்த நிலையில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், இந்த முறை எப்படியாவது கோப்பையை கைப்பற்றும் என்ற முனைப்பில் பெங்களூர் அணியும் முதல் போட்டியில் வெல்ல வேண்டும் என்று முனைப்புடன் மோதுவதால் ஆட்டத்தில் பஞ்சமிருக்காது என்பது உறுதியாக நம்பலாம்!