ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை செந்தமிழ்நகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 3 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *