சென்னையில் கொரோனா தடுப்புக்கு 15 சிறப்பு குழுக்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சில நாட்களாகவே நாளோன்றுக்கு 3500-க்கும் அதிகமாக தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் 4276-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் இன்று ஒரே நாளில் 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.30,000-க்கும் அதிகமானோர் பெருந்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 19-பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மண்டலத்திற்கு ஒரு குழு வீதம் மொத்தம் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.