கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி
நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சமானியன் தொடங்கி பெரிய கோடீஸ்வரர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.
ஐந்து மாநில தேர்தல் அறிவிப்புக்குப் பின் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வரிசையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும் இணைந்துள்ளார்.பினராயி விஜயனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
முதல்வர் பினராயி விஜயனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும்,அவரது வயது 75 என்பதும் குறிப்பிடத்தக்கது.