குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் – உதயநிதி விளக்கம்
தன்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை உதயநிதி எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் நான் மறைந்த அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் குறித்து பேசியன தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.மேலும்,தன்னுடைய முழுப் பேச்சையும் கேட்காமல் குறிப்பிட்ட இடத்தை மட்டும் கேட்டுவிட்டு தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தவறாக தொடுக்கப்பட்ட வழக்கு எனவும் மேலும் இது குறித்து நேரில் விளக்கமளிக்க தயாராக உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்