சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை! நீதிமன்றம் அதிரடி

நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவுக்கு செக் மோசடி வழக்கில் சென்னை எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
’இது என்ன மாயம்’ பட தயாரிப்புக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.5 கோடியை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது. கடனை திருப்பியளிப்பதில் மேஜிக் பிரேம் நிறுவனம் செக் மோசடி செய்துள்ளதாக புகாரளிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார்,ராதிகா சரத்குமார் உள்ளனர்.
இதனையடுத்து, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராதிகாவுக்கு 2 வழக்குகளில் தல ஒரு வருடம் மேஜிக் பிரேம் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் ஒரு வருடமும் சிறை தண்டனை விதித்துள்ளது.