தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4000 ஆயிரத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தினசரி கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தில் 2500-க்கும் அதிகமாக பதிவானது.இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளீல் 3986-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் 1459 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னை தவிர காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கோவை,திருவள்ளூர்,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டும் வருகிறது.தற்போது தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27000-த்தை கடந்துள்ளது.