9 மணி வாக்குபதிவு நிலவரம்

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது. காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 13.80% பேர் வாக்களித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 9.98 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *