வாக்குப்பதிவில் குளருபடி! எந்தப் பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்று காலை முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும், சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது போன்ற காரணங்களால் வாக்குப்பதிவு தாமதமாகி வருகிறது.
மேலும், சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்துக்கு ஓட்டு விழுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். விருதுநகரில், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்தால் அது தாமரை சின்னத்துக்கு விழுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுங்கான்கடை அரசு துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் நடந்த வாக்குப்பதிவில் வாக்கு பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.