5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அனைத்து விதமான தேர்தல் பரப்புரைகளும் நேற்றோடு முடிந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளும் தீவிரமாக பின்பற்றப்படுகிறது.
வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ஆதரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், திமுகவினர் திருட்டுத்தனமாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். அதிலும், குறிப்பாக 5 தொகுதிகளில் மட்டும் அதிகமாக பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது.
இதனால், அந்த 5 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார்.