நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் வாக்களிக்க உதவும் வகையில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொண்டு ஐனநாயகக் கடமையை முறையாக ஆற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தொழிலாளர் நல ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். நாளை விடுமுறை அளிக்கத் தவரும் நிறுவனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.