தமிழகத்தில் நிறைவடைந்தது தேர்தல் பிரச்சாரம்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக நடந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒரு நாளைக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்துள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக தமிழகமெங்கும் நடந்த பல்வேறு கட்சிகளின் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் ஞாயிறு மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து 6ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலை எதிர்நோக்கியுள்ளன.