கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தார் நல்லகண்ணு!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி பரப்புரை மேற்கொண்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கடந்த 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தில் மகள் ஆண்டாள், பேரன், பேத்தி என மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *