பாஜகவுக்கு 3 சின்னங்கள் 3 முகங்கள் – திருமா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. நாளை மாலையுடன் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று அரியலூரில் மதிமுக வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, “ இந்த தேர்தலில் பாஜகவுக்கு தாமரை சின்னம் மட்டும் கிடையாது.

அதைத் தவிர மேலும் இரட்டை இலை மற்றும் மாம்பழம் என இரண்டு சின்னங்கள் உள்ளன. எனவே, அதிமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது பாஜக வெற்றி பெற்றதற்கு தான் சமம்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *