அமைச்சர் கடம்பூர் ராஜூவை முற்றுகையிட்ட பெண்கள்

கோவில்பட்டியில் வாக்கு கேட்கச் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவை அப்பகுதியில் உள்ள பெண்கள் முற்றுகயிட்டனர்.

தொகுதி பக்கமே வரமால் தற்போது தேர்தலுக்காக மட்டும் தொகுதிக்கு வருவதாக கூறி அமைச்சரை பெண்கள் முற்றுகையிட்டனர்.மேலும்,சரிவர குடிநீர் வசதி மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் தற்போது வாக்குகளை பெறுவதற்காக மட்டும் தொகுதிக்கு வருவது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பினர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை பெண்கள் முற்றுகையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *