கோவை தெற்கு வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் கடிதம்

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர் வேட்பாளர்கள் நேர்மையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் நம்மில் யார் வெற்றி பெற்றாலும் கோவையை இந்தியாவின் முதன்மை நகராக உருவாக்க பாடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் மற்ற வேட்பாளர்கள் தோள் கொடுத்து செயல்பட்டால் நேர்மையான ஜனநாயகம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *