இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 714 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 714 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 89,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,23,92,260-ஆக அதிகரித்தது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 714 பேர் உயிரிழந்தனா். இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 1,64,110-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,15,69,241 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 6,58,909 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் இதுவரை 7,30,54,295 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.