பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு!
அடிதடி வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை கைது செய்ய கோவை மாவட்ட காவல்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28 ம் தேதி பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையத்தில் நடந்த திமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அடிதடி ஏற்பட்டது. காவல் நிலையத்தில் புகாரக பதிவு செய்யப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உட்பட அதிமுகவினர் 7 பேரையும், திமுகவினர் 4 பேரையும் கைது செய்ய கோவை மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.