ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகின்றன. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.

இதனால், பணப்பட்டுவாடாவை தடுக்க அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த வருமான வரித்துறை சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *