ஸ்டாலின் மகளைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு!
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மகள் மற்றும் அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் மற்றும் அவரது மகன் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கே, இது அரசியல் பழிவாங்கும் செயல் என தலைவர்கல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதற்குள் மேலும் ஒரு திமுக தொகுதி வேட்பாளரின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
கரூரில் முன்னாள் அமைச்சரும். கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான வி.செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.