பிரியங்கா காந்தி கணவருக்கு கொரோனா! தமிழக பயணம் ரத்து
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்ந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் வசந்த் குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரப்புரைக்காக தமிழகம் வருவதாக இருந்தது.
இந்நிலையில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பிரியங்கா காந்தியும் கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாளை கன்னியாகுமரிக்கு வரவிருந்த பிரியங்கா காந்தியின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.