சென்னை சினிமா தயாரிப்பாளர் வீட்டில் ஐ.டி ரெய்டு

தமிழகத்தில் சில நாட்களாவே திரும்பிய திசையெங்கும் அதிரடியாக ஐ.டி ரெய்டு நடந்து வருகிறது.இதனால்,தமிழகம் தினமும் பரபரப்பாகவே இருந்து வருகிறது.அந்த வரிசையில் இன்று சினிமா தயாரிப்பாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடந்து வருகிறது.

சென்னை சினிமா தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.நந்தனத்தில் இருக்கும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.

தயாரிப்பாளர் ஜெயமுருகன் மதுபான ஆலை நடத்தி வருகிறார்.அந்த ஆலையிலும் அதிரடியாக வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது.

கருணாநிதியின் உளியின் ஓசையை ஜெயமுருகன் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *