ஐ.டி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை ! தலைவர்கள் கண்டனம்

தமிழக அரசியல் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், இறுதி கட்ட தேர்தல் பரப்புரைகளில் தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு மக்களிடம் எதிர்ப்பலை உருவாகியுள்ளது. கருத்து கணிப்புகளும் திமுகவிற்கு சாதகமாகத் தான் உள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக வினர் பணப்பட்டுவாடா செய்வதாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் மேல் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திடீரென இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் இன்னும் சில நாட்களில் நெருங்கும் நிலையில், இந்த சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் தலைவர்கள் கடும் கண்டணம் தெரிவித்துள்ளனர்.

இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரங்களைத் தடுப்பதற்காகத் தான் இந்த வருமான வரித் துறை சோதனை என திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கெல்லாம் சரியான தண்டனையை மக்கள் தேர்தலில் கொடுப்பார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *