எனக்கு இன்னொரு முகம் இருக்கு என மிரட்டிய அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
தேர்தல் பரப்புரையின் போது, ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை கொள்கை ரீதியாக தாக்கிப் பேசுவது இயல்பு தான். ஆனால், அது வரம்பு மீறி தனி மனித தாக்குதலாக மாறுகையில் பேசுபொருளாகி விடுகிறது.
அப்படி அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் வகையில் பேசியிருந்தார். “தூக்கி போட்டு மிதித்தால் பல்லு எல்லாம் தெறிச்சிரும் பாத்துக்க. யாரு கிட்ட எனக்கு இன்னொடு முகம் இருக்கு அது கர்நாடக முகம். அதைக் காட்ட வேண்டாம் என்று பார்க்கிறேன்” என மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.
இதனால், அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.