இந்த பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் திமுக பயப்படாது – துரை முருகன்

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, திமுகவின் பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த மாதிரி பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். தேர்தல் நேரத்தில் அரசியல் உள் நோக்கத்தோடு வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது.

மக்களிடம் திமுகவுக்கு உள்ள செல்வாக்கை குறைக்கும் நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்பது அறிந்தது தான். ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் அதில் புல் முளைத்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *