அண்ணா பல்கலைக் கழகத்தின் அடுத்த துணை வேந்தர் யார்?

தற்போது, அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா உள்ளார். இவரின் பதிவிகாலம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால், அடுத்த அண்ணா பல்கலைக் கழகத்தின் அடுத்த துணை வேந்தர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து, புதிய துணை வேந்தரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதற்காக, துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக ஜெகதீஸ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஜெகதீஸ் ஏற்கனவே, 2020 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் குழு தலைவராக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெகதீஸ் தலைமையிலான குழு மூன்று பேரை துணை வேந்தர் பதவிக்காக தேர்ந்தெடுத்து ஆளுநருக்கு அனுப்பும். அதிலிருந்து ஒருவர் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *