விருதுக்காக மோடிக்கு நன்றி தெரிவித்த ரஜினி

திரைத்துறையில், மகத்தான சாதனைகளை செய்பவர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”திரைத்துறையின் உயரிய விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணனுக்கும், சக ஓட்டுனருமான நண்பன் ராஜ் பகதூருக்கும் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன்.

என்னை மனமார வாழ்த்திய தமிழக முதல்வர், துணை முதல்வர் , எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், நண்பர் கமலஹாசன் ஆகியோருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *