வாக்குச்சாவடி செலவுகளுக்காக ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தேர்தல் ஆணையமும் தனது பணிகளை விரைந்து முடித்து வருகிறது.இந்நிலையில்,இன்று வாக்குச்சாவடி முன்னேற்பாடு செலவுகளுக்காக ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.குடிநீர் வசதி, மின்சாரம், பர்னிச்சர் வசதிகளுக்காக ஒதுக்கியுள்ள நிதியை வங்கி ஆன்லைன் மூலம் மட்டுமே பரிமாற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.