ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

திரைத்துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்காக தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும். இந்நிலையில், இந்திய சினிமாவில் சிறப்பான பங்களிப்பை செய்ததற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் திலகம் சிவாஜி, மற்றும் இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
தாதாசாகேப் பால்கே விருதைப் பெறும் 51 வது நபர் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது.