யோகி ஆதித்யநாத் வருகையில் கலவரம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக நேற்று கோவைக்கு வருகை புரிந்தார்.
கோவைக்கு வந்திருந்த அவரை வரவேற்று பாஜகவினர் பேரணி நடத்தினர். அப்போது, திறந்திருந்த கடைகள் மீது பாஜகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கற்களை வீசி தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.