முதியோர்களுக்கான தபால் வாக்குகள் ஏப்ரல் 5 வரை பெறப்படும்- சத்ய பிரதா சாகு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், வாக்களிக்க முடியாமல் உள்ள வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்காக தபாலில் வாக்களிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 80 வயதான முதியவர்களிடம் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் மற்றும் காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 அதாவது, தேர்தல் முடிவு வெளியிடப்படும் அந்த நாளில் காலை 8 மணி வரை பெறப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய வாக்காளர்களுக்கு தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தம் 4.66 லட்சம் அஞ்சல் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்றும் செய்தியாளர்களிடம் சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.