தமிழகத்தில் 3000-த்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா பரவல் ஏற்பட்டு ஒரு ஆண்டு நிறைவடந்த நிலையில் இன்னும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.உலக அளவிலும் மற்றும் இந்திய அளவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது.குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமாக கொரோனா தொற்றுகள் பதிவாகி வந்த நிலையில் இன்று அது 3000-த்தை நெருங்கியுள்ளது.
இன்று ஒரே நாளில் 2817 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 பேர் பெருந்தொற்றால் பலியாகியுள்ளனர்.
சுகாதாரத்துறை தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க கூறி வலியுறுத்தி வருகிறது.கொரோனா பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதின் மூலமும் முகக்கவசம் அணிவதன் மூலமுமே பெருந்தொற்று பரவலை கட்டுபடுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.