சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக இன்றுமுதல் 3090 சிறப்பு பேருந்துகள்!
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக இன்று முதல் 5ம் தேதி வரை சென்னையில் 3090 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.
தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனையடுத்து வாக்களார்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக இன்று முதல் 5ம் தேதி வரை சென்னையில் இருந்து 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அந்தவகையில் 3 ஆம் தேதி வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், 4, 5 ஆகிய இரண்டு தேதிகளில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்கள், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.