குமரியை குறி வைக்கும் தேசியக்கட்சி தலைவர்கள்!

பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார். 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் தேசிய கட்சி தலைவர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் பிரச்சாரத்திற்காக கேரளாவின் பாலக்காடு, தமிழக்கதின் தாராபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நாளை கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்யவும் வருகை தர உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுடன், மக்களவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. ஏற்கெனவே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குமரியில் பிரச்சாரம் செய்துள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை (2-ம் தேதி) மாலை 3.45 மணியளவில் கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து வரும் 3-ம் தேதி மாலை 3.30 மணியளவில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *