கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளான கடைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கமல்!

கோவையில் உத்திரபிரதேச முதல்வர் யோகியின் பிரச்சாரத்தையொட்டி கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளான செருப்புக் கடைக்கு சென்று மநீம தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் பைக் பேரணி நடத்தினர்.

அப்போது டவுண்ஹால் பகுதிக்கு சென்ற  பாஜகவினர் அங்குள்ள கடைகளை அடைக்கக்கூறி கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அத்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப்  வர்த்தகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜகவினர் கல்லெறிந்த கடைக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததோடு அந்த கடையில் தனக்கு ஒரு ஜோடி செருப்பும் வாங்கிக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *