ஐபிஎல் போட்டியில் இருந்து சிஎஸ்கே வீரர் விலகல்
வரும் ஐபிஎல் 2021ம் ஆண்டுக்கான போட்டியிலிருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
ஐபிஎல் என்றாலே இந்தியாவில் கொண்டாட்டம் என்ற மனநிலை தொற்றிகொள்கிறது. கடந்த வருடம் கொரொனா தொற்றின் காரணமாக ஐபிஎல் போட்டி சார்ஜாவில் நடந்தது. இதனையடுத்து இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ரசிகர்கள் இல்லாமல் வரும் 9ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
ஏற்கெனவெ ஐபிஎல் லில் பங்குபெறும் அணியை பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளார் ஹேசில்வுட் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஆஷஸ் தொடரை சந்திக்க உள்ள நிலையில் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.