இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்!

இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்க இடைக்கால தடை விதிக்கு முடியாது என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அர்ஜூன் நடித்த ஜெண்டில்மேன் திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர இயக்குநர் சங்கர். அதன் பின் முதல்வன், நண்பன், இந்தியன், எந்திரன் என எண்ணற்ற வெற்றிப்படங்களை தந்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வாலின் நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இயக்குநர் சங்கர் இயக்க உள்ளதாக அந்த படத்தினை தயாரிக்கும் லைகா நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த படபிடிப்பில் கிரேன் இடிந்து விழுந்து சங்கரின் 3 உதவி இயக்குனர்கள் பலியானதையடுத்து படபிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து வந்த கொரோனா ஊரடங்கு காரணமாகவும், நடிகர் கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இயக்குநர் சங்கர் தெலுங்கில் நடிகர் ராம்சரணை வைத்து ஒரு புதியபடம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து  தயாரிப்பு நிறுவனமான லைகா இந்தியன் 2 படத்தை முழுவதுமாக முடித்து கொடுக்காமல் வேறு படத்தை இயக்க இடைக்கால தடைவித்த வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.

இதனை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.உஷா, இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்க  இடைக்கால தடைவிதிக்க முடியாது என்றும், இயக்குநர் சங்கர் வரும் 15 ம் தேதி இது குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *