இந்தியாவில் தொடர்ந்து கோரமுகம் காட்டும் கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு 459 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,21,665 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 459 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,62,927 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *