அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும், அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இரு மாநிலங்களிலும் முதல்கட்டத் தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 39 தொகுதிகளிலும் 2ம் கட்ட தேர்தல்  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வன்முறைகள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கான தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் முக்கிய தொகுதியாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதி பார்க்கப்படுகிறது. அவரை எதிா்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா். மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *