பான்கார்டில் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்… முடங்கியது இணையதளம்!
பான்கார்டில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று வருமான வரித்துறை நிலையில் குறிப்பிட்ட இணைதளம் முடங்கியுள்ளது.
மார்ச் 31ம் (இன்று) தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அப்படி இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாமல் போகும் எனவும், பான் கார்டு இல்லையெனில் வருமான வரி செலுத்தவும் முடியாது, மேலும் செலுத்தப்பட்ட வரியை திரும்பவும் பெற முடியாது என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு அபராதமாக ரூ.1000 விதிக்கப்படும் என்று மத்திய அரசு நிதியியல் கொள்கை 2021 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அபராத விதிப்பிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதலும் கிடைத்தது.
கடந்த 2017ம் ஆண்டு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. இதற்காக கால அவகாசம் வழங்கி, பல முறை கால நீட்டிப்பும் செய்த நிலையில் மார்ச் 31, 2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. இன்றே அந்த கடைசி நள் என்பதால் இணையதளம் முடங்கியுள்ளது.
ஆதார் – பான் இணைப்பது எப்படி?
1. வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home
2. இடது புறம் இருக்கும் Quick Links பட்டியலில் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்
3. குறித்த இணையப் பக்கத்தில் உங்கள் பான் எண், ஆதார் எண், ஆதார் அட்டையில் இருக்கும் பெயர் ஆகியவற்றை நிரப்புங்கள்
4. உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் இருந்தால் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.
5. UIDAI அமைப்பிடம் உங்களது ஆதார் தகவல்களைச் சரிபார்க்க ஒப்புதல் அளிக்கச் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.
6. Captcha Code-ஐ பதிவு செய்து Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆதார் – பான் இணைந்ததா சோதிப்பது எப்படி ?
1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home
2. லாக்இன் செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
3. Profile Settings-ல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்
4. ஏற்கனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கிடைக்கும்.
5. இல்லையெனில் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும்.