தேர்தலையொட்டி நந்திகிராமத்தில் 144 தடை உத்தரவு!

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குபதிவு தொடங்குகிறது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராமம் தொகுதியும் வருகிறது. இதற்கு முன், முதல்கட்ட வாக்குப்பதிவின் போது, சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தது.

இதனால், பதற்றத்தைக் குறைக்க நாளை நந்திகிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *