தமிழகத்தில் 2500-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.கடந்த 5 நாட்களாகவே 2000-க்கும் அதிகமாக கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.இந்நிலையில்,ஒரே நாளில் 2579-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 1000-த்தை நெருங்கி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 969-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19 பேர் பெருந்தொற்றால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.