ஏப்ரல் 4ம் தேதியன்று 7 மணிவரை பிரச்சாரம் செய்ய அனுமதி!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 4ம் தேதியன்று மாலை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் தற்போது பிரச்சாரத்திற்காக கடைசி நாளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளாக ஏப்ரல் 4ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஏப்ரல் 4ம் தேதியன்று 7ம் தேதி வரை பிரச்சாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.