எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சிலிண்டர் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் இன்றைய விலை ரூ.835 ஆக உள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.