வெற்றிவேல் வீர வேல் என உரையை தொடங்கிய மோடி
பிரதமர் மோடி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காகத் தமிழகம் வந்துள்ளார். தாராபுரத்தில் பாஜகவின் தமிழகத் தலைவர் எல். முருகனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
அதில் பேசத் தொடங்கிய மோடி, வெற்றி வேல் வீர வேல் என தனது உரையைத் தொடர்ந்தார். மேலும், உலகின் பழமையான மொழி தமிழ். அந்த பழமையான மொழியில் ஒரு சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க உள்ளது. நாங்கள் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்துத் தான் ஓட்டு கேட்கிறோம். உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாக்களியுங்கள் என பேசி வருகிறார்.