தேர்தல் பரப்புரைக்காக தமிழகம், புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதை அடுத்து பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி புதுச்சேரி வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் ஏற்கெனவே முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தமிழ, கேரளா, புதுச்சேரி வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இன்னும் தேர்தலுக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில் தேசியக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மூன்று மாநிலத்திலும் தீவிர பிரச்சாரத்திற்காக படையெடுத்து வருகின்றனர். சமீபத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஸ்மிரிதி இராணி ஆகியோர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதே போல் எதிர்க்கட்சியை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதற்கிடையே இன்று பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். தமிழக பாஜக தலைவர் போட்டியிடும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மாலையில்  புதுச்சேரியில்  பாஜக மற்றும் கூட்டனி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய உள்ளார்.

இதற்கிடையே தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி புதுச்சேரி வர உள்ள நிலையில் அங்கு இன்று ஒருநாள் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *