தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி… டிவிட்டர் டிரெண்டாகும் #GoBackModi!

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும்  பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கம்போல #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளமான டிவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இன்று அதிகாலை முதலே ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்திற்கு  பிரதமர் மோடி வரும்போதெல்லாம் டிவிட்டரில் ##GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *