டாஸ்மாக்,திரையரங்குகளை மூடக்கோரி வழக்கு
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதன் காரணமாக டாஸ்மாக்,திரையரங்குகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு தடைவிதிக்க கோரி வழக்கறிஞர் ராம்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா பரவல் ஐந்து மடங்கு அதிகமாக பரவி வருவதாகவும்,கட்டுப்பாடுகள் இல்லையென்றால் கொரோனாவின் பரவல் மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும்,இந்த மனுவில் மற்ற மாநிலங்களில் பொதுக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை ராம்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.